தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசந்து இருந்தார். தற்போது பாலிவுட் திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தமன்னா பிரபல ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக வதந்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகை தமன்னா நேர்காணல் ஒன்றில் அளித்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், அவர் நான் விஜய் வர்மாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் அவ்வளவு தான்.

இது போன்ற அதிகம் பரவும் காதல் வதந்திகள் அனைத்திற்கும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. நடிகர்களை விட நடிகைகளை அதிக திருமண வதந்திகளில் சிக்குகின்றனர். அது ஏன் நடக்கிறது என்று புரியவில்லை என ஆவேசமாக பேட்டியில் பேசியிருக்கிறார்.











