தமிழகத்தில் நடிகர் நடிகைகள் அரசியலுக்கு வருவது தெரிந்த ஒரு விஷயம் தான். அதற்கு முன்னோடி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள். அவரை போல பல நடிகைகள் அரசியலுக்கு வந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற காவலா பாடலில் தமன்னா ஆடிய நெளிவு சுளிவான நடனம் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்துவிட்டார். அது மட்டும் அல்ல அம்மணி ஹிந்தியிலும் படு பிஸி. பிரபலமான ஒரு ஹிந்தி ஹீரோவை தான் காதலித்து வருகிறார் தமன்னா.

புதிய நாடாளுமன்றத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாலிவுட் நடிகைகள் சிலர் வந்திருந்தனர். அந்த லிஸ்டில் தமன்னா, குஷ்பூ போன்ற பல நடிகைகள் வந்துள்ளனர். அரசியல் நடக்கும் இடத்தில் தமன்னா போன்ற நடிகைகள் எதற்கு என்று புரியாமல் மக்கள் அனைவரும் குழம்பி உள்ளனர்.

குஷ்பு அவர்களும் முதலில் திமுக அதன் பின்னர் காங்கிரஸ் தற்பொழுது பாஜக கட்சியில் உறுப்பினராக உள்ளது தெரிந்த ஒன்று, இதுபோலவே ஒரு வேலை தமன்னாவிற்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை என்று புலம்பி இருக்கிறார்கள் சிலர்.
புதிய நாடாளுமன்றத்திற்கு வந்த தமன்னா பத்திரிகையாளர்களிடம் கூறியது:
வரலாற்று சிறப்புமிக்க மகளிர் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதால், நமது புதிய பார்லிமென்டில் வரலாறு காணும் பெருமைக்குரியது. இந்த முக்கியமான சந்தர்ப்பத்திற்கு என்னை அழைத்ததற்காக நரேந்திர மோடி ji மற்றும் அனுராக் தாக்கூர் Ji அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். என் இதயத்தில் என்றென்றும் பதிந்த நாள் என்று கூறி உள்ளார் தமன்னா.

இன்று நடந்த இந்த நிகழ்வை பார்த்த பின் சீக்கிரம் தமன்னா ஜி வாழ்க என்ற கோஷம் ஒலித்தாலும் ஒலிக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள் .