தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், அஜித் போன்ற முன்ணனி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

இவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்திற்கு பிறகு இவர் இந்தியா அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவரானார். தமிழ் மட்டும் அல்லது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் எவ்வாறு பொழுதை கழிக்கிறார் என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது போர் அடிக்கிறது என்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இவர் துளி கூட மேக்கப் போடவில்லை, இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை ஸ்ருதிஹாசன் Cute என்று கமெண்ட் செய்துள்ளார்.