Monday, May 6, 2024
-- Advertisement--

தற்கொலை செய்ய முயன்ற நபரை நூலிழையில் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!!! ரியல் ஹீரோ இவங்க தான். வீடியோ உள்ளே

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. சமீபகாலமாக தற்கொலைகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு சிலர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ஒருசிலர் பண அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வாழ்க்கை என்றாலே பலவித பிரச்சனைகள் சவால்களை சந்தித்தே ஆக வேண்டும் என்பது கட்டாயம் .

பிரச்சனைகளை சமாளிக்கும் சக்தி நமக்குள் தான் இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு ஆரம்பமே நாம் தான் காரணம். பிறரிடம் ஏமாறுவதும் ஏமாற்றுவதும் நமது தவறு. தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று இறந்து விட்டால் அந்த பிரச்சனை முடிந்து விடும் ஆனால் தீர்வு கிடைக்கவே கிடைக்காது.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கணேசன் புரத்தை சேர்ந்த 45 வயது நபரொருவர் நில அபகரிப்பு பிரச்சினை தொடர்பாக சட்ட போராட்டங்களை நடத்தி உள்ளார் அதில் சரியான தீர்வு கிடைக்காததால் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் .

உண்ணாவிரதத்தில் சரியான நீதி கிடைக்காததால் இறுதியாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்களுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அந்த நபர் கேட்காமல் நீர் தொட்டியில் இருந்து கீழே குதிக்க முயன்றார் அப்பொழுது தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் பாடுபட்டு தத்துரூபமாக மடக்கிப் பிடித்த தீயணைப்பு படையினரை பாராட்டி வருகிறார்கள். இதனை திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தீயணைப்பு வீரர்களை பாராட்டி பகிர்ந்துள்ளார் .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles