தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய நடிகரின் ஒருவர் சூர்யா. தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட சிற்பம் போல நடிப்பில் தேர்ச்சி பெற்றவர் சூர்யா. சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே மக்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது. மாஸ் ஹீரோவை காட்டிலும் சிறந்த நடிகர் என்ற பெயரை தற்பொழுது சூர்யா வாங்கி உள்ளார் என்றே கூறலாம்.

நடிப்பு மட்டுமில்லாமல் சூர்யா தற்பொழுது படங்களை புரொடக்ஷன் செய்தும் வருகிறார். மேலும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஆதரவற்ற மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கி வருகிறார் .

சூர்யாவின் காதல் மனைவியான ஜோதிகா 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தற்பொழுது வளர்ந்து வருகிறார்.

மும்பையில் தனி குடுத்தனம் சென்று விட்டதாக கூறப்படும் சூர்யா- ஜோதிகா சமீபத்தில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரை சாந்தித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை சூர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு அன்பு மற்றும் மரியாதை என பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு எந்த ஒரு காரணம் இல்லை எனவும் மரியாதை நிமித்தமாகவே சூர்யா சச்சினை சந்தித்து இருப்பார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.