Friday, May 3, 2024
-- Advertisement--

ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடும் நீட்தேர்வு கொந்தளிக்கும் சூர்யா.

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம் ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது ஊழலில் தகுதியை தீர்மானிக்கும் ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது.

மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது மாணவர் நலனுக்கும் மன நலனுக்கும் நீ போன்ற தீர்ப்புகள் ஆபத்தானவை.

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ கே ராஜன் அவர்கள் தலைமையிலான குழு நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும் படி கேட்டு இருக்கிறது அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேசன் மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அந்த குழுவிடம் பதிவு செய்கிறது.

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். மாணவர்களும் அவர் தம் குடும்பங்களும் அனுபவிக்கும் துயரங்களை தவறாமல் நீதிபதி கே கே ராஜன் அவர்கள் தலைமையான மக்களிடம் neetimpact2021@gmail .com மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா போன்ற பல்வேறு மொழி பண்பாடு கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில் கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் அது ஒன்றே நிரந்தரத் தீர்வு கல்வி மாநில உரிமை என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதன்மூலம் நீட் தேர்வுக்கு தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles