வருங்காலத்தில் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை.
சென்னை முகப்பேரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அண்ணாமலை அவர் பேசியது நீட் தேர்வு பற்றி சூர்யாவின் கருத்து தவறானது. அவர் நல்ல மனிதர் நல்ல நடிகர் நீட் தேர்வு குறித்து அவருடைய பார்வை அடுத்த ஆண்டில் மாறும் என்று எண்ணுகிறேன். நீட் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் நம்முடைய செல்ல சிலபஸில் இருந்து தான் கேட்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக தமிழகத்தில் ஆட்சியில் அமரும். 2021 வருகின்ற தேர்தலில் பாஜக வலுவான கட்சியாக காலூன்றி நிற்கும். திமுக அதிமுக இரு கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் பாஜகவை எதிர்பார்க்கின்றனர். விரைவில் பாஜக தமிழகத்தில் ஆட்சியில் அமரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.