சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம் பட்டிதொட்டி என்றும் மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வரும் இந்நிலையில் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தினம் ரஜினிகாந்த் இமயமலை புறப்பட்டு சென்று விட்டார்.
இமயமலைக்கு சென்ற ரஜினி:
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலை சென்று வருவது வழக்கம் . ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன் ரஜினி திடீரென்று கிளம்பி இமயமலை சென்றது பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது. பத்திரிகையாளர்கள் அவர் இயமமலை கிளம்பும் போது ஜெயிலர் படம் நீங்க பத்துடீங்க படம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு நீங்களே படம் பாத்துட்டு சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
வேஷ்டி சட்டை இயமய மலையில் சூப்பர்ஸ்டார்:
4 வருடங்களுக்கு பிறகு இமயமலை சென்ற ரஜினி அங்கு தனது நண்பர்களுடன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து சிறப்பு பூஜைகளிலும் கலந்து கொண்டு உள்ளார். இங்கு தமிழ்நாடே அவரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது ஆனால் அவர் வேஷ்டி சட்டை அணிந்து கொண்டு தனது ஆன்மீக நண்பர்களுடன் ஆன்மீகப் பயணத்தில் பிசியாக இருக்கிறார். பயபக்தியுடன் தயானந்த சரஸ்வதி சமாதி ரிஷிகேஷ் ஆசிரமத்தில் வழிபடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அதில் ரஜினி அவர்கள் கூறியிருப்பது AUG 10 இன்னைக்கு என் படம் ரிலீஸ் நான் இங்க வந்துட்டேன். காலையிலே சுதானந்த ஜி சொன்னாரு கவலைப்படாதீங்க பிக்ச்சர் பெரிய ஹிட் ஆகும்னு அவரே சொல்லிட்டாரு அப்ப பிக்சர் ஹிட்டுதான் என்று ரஜினி கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.