Monday, May 20, 2024
-- Advertisement--

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியை பார்த்து அசந்து போன ரஜினி..!!! விஜய்க்கு பறந்த கால்..!!! என்ன கூறியுள்ளார் தெரியுமா?

தலைவி இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம். ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் என்பது தான் உண்மை குறிப்பாக இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடித்த ஹிந்தி நடிகை கங்கனா ராவத் அவர்களும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமி அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல இடங்களில் அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உள்ளனர்.

ஒரு சில காட்சிகளில் அச்சு அசல் எம்ஜிஆர் அவர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் அரவிந்த்சாமி அதுபோல ஜெயலலிதா அவர்களின் கம்பீரத்தை அப்படியே திரையில் பிரதிபலித்து உள்ளார் நடிகை கங்கனா.

ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் சொல்ல முடியுமா என்பது பெரிய சவால் தான். அரசியல் கதைகள் என்றாலே தமிழ்நாட்டில் பல சிக்கல்கள் வரும் அதிலும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதை என்றாலே ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் அதனை சரியாக கையாண்டு தலைவி அனைவரும் ரசிக்கும்படி எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

தலைவி படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று பார்த்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தனியாக திரையிட்டு காட்டப்பட்டது படத்தைப் பார்த்த ரஜினி அவர்கள் இயக்குனர் விஜய்க்கு படம் முடிந்த உடனே கால் செய்து பாராட்டியுள்ளார் அதுமட்டுமல்லாமல் படத்தை சிறப்பாக உருவாக்கியதற்கு வாழ்த்துக்களும் கூறியுள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் அவர்களின் வாழ்த்து பெற்ற படக்குழுவினர்கள் செம குஷியில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles