Sunday, May 19, 2024
-- Advertisement--

அண்ணாத்த திரைவிமர்சனம் | Annaththe Movie Review.

அண்ணாத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு உலகமெங்கும் வெளியாகி உள்ளது. விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த சிறுத்தை சிவா அதே காம்பினேஷனில் ரஜினியுடன் இணைகிறார் என்பதினால் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு பார்க்கலாம் வாங்க.

காளையன் ரஜினிக்கு ஒரு அன்பு தங்கை அவர்தான் கீர்த்தி சுரேஷ். தங்கை கீர்த்தி சுரேஷ் வட இந்தியாவில் படித்துவிட்டு மறுபடியும் தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். ரஜினி தங்கை கீர்த்தி சுரேஷ் மீது உயிராகவும் கீர்த்தி சுரேஷ் அண்ணனின் மீது உயிராகவும் இருக்கிறார். தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் ரஜினி திருப்பாச்சி விஜய் போல என் தங்கச்சிக்கு சூப்பரா மாப்பிள்ளை பாக்கணும் என்று மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் ரஜினிக்கே தெரியாமல் கீர்த்தி சுரேஷ் தனது காதலனுடன் கொல்கத்தா செல்கிறார். கொல்கத்தாவில் சில பிரச்சனைகளில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் மாட்டிக்கொள்கிறார்கள். கொல்கத்தா சென்று எப்படி தங்கை கீர்த்தி சுரேஷுக்கு தெரியாமல் அவருக்கு வரும் ஆபத்தை தடுத்து நிறுத்தி கீர்த்தி சுரேஷை பிரச்சனையிலிருந்து எப்படி விடுவிக்கிறார் என்பதே மீதி கதை.

திருப்பாச்சி படத்தில் கிராமத்தில் இருந்து தங்கையே நகரத்தில் கட்டிக் கொடுத்துவிட்டு தங்கை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு சென்று ரவுடிகளை கிரிவலம் என்ற பெயரில் பந்தாடுவது போல. ரஜினி தன் தங்கைக்கு பிரச்சனை என்று கொல்கத்தா சென்று அங்கு உள்ள ரவுடிகளை பந்தாடுகிறார்.

திருப்பாச்சி கதையில் வேதாளத்தையும், விஸ்வாசத்தையும் கலந்துவிட்டு மிக்ஸ் பண்ணி அண்ணாத்த என்று டைட்டில் வைத்து ரஜினியை மட்டும் அல்லாமல் பார்ப்பவர்களையும் ஏமாற்றியிருக்கிறார் சிவா.

ரஜினியைப் பொறுத்தவரை இளம் வயதில் பார்த்தது போல துள்ளலான நடிப்பு, குறும்புத்தனம், சென்டிமெண்ட் காட்சிகளில் இயல்பான நடிப்பு என்று வழக்கம் போல காளையன் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடி இருக்கிறார். மனிதன் 70 வயதிலும் இப்படி நடிப்பது பெரிய விஷயம் அதனை இயக்குபவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் வரும் படங்களில் இயக்குனர்கள் ரஜினியை பயன்படுத்திகிறார்கள் தவிர கதையை பயன்படுத்துவதில்லை. ரஜினியை வைத்து படம் செய்கிறோம் என்று சிறுத்தை சிவா கொஞ்சம் கதையில் மெனக்கெட்டு இருக்கலாம்.

கீர்த்தி சுரேஷ் ஸ்லிம்மா ஆவதற்கு முன் இருந்த கீர்த்தியின் வசீகரம் ஸ்லிம்மான பின் சற்று குறைவு. ரஜினிக்கு தங்கையாக தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆனால் ரஜினி கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் எதுவும் அழுத்தம் இல்லாததால் இவர்களின் சென்டிமெண்ட் காட்சிகள் கூட சில இடங்களில் காமெடி காட்சிகள் போல இருந்தது. என்ன தான் கீர்த்தி சுரேஷ் எமோஷனலாக நடித்திருந்தாலும் சென்டிமெண்ட் காட்சிகள் பெரிதாக ஒர்க்கவுட் ஆகாததால் ரசிக்கும்படி இல்லை.

குஷ்பூ, மீனா என்று ரஜினியின் முன்னால் ஜோடிகள் சில காட்சிக்கு வந்து செல்கின்றனர். இயக்குனர் ஆர்ட்டிஸ்ட் அதிகமாக சேர்த்தால் படம் பிரமாண்டமாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னமோ பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், சத்தியன் என்று அனைவரையும் இந்தப்படத்தில் பெரிதாக பயன்படுத்தாமல் தலை காட்ட மட்டும் வைக்கிறார் சிவா.

இயக்குனர் சிவா விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சிவாவிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்தது விஸ்வாசம் போன்ற குடும்பங்கள் ரசிக்கும் ஒரு கதையை தான் அதற்காக விஸ்வாசத்தின் சில காட்சிகளை திரும்ப எடுத்து இருக்க தேவையில்லை.

இசையமைப்பாளர் டி இமான் படத்திற்கு பெரிய ப்ளஸ் இவர்தான் இவருடைய பிஜிஎம் ஸ்கிரீனில் பல இடங்களில் தெறிக்க விடுகிறது ஆனால் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாக இல்லாததால் இமான் இசை பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை.

படத்தின் ப்ளஸ்

ஒன் & ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இசையமைப்பாளர் டி இமான்.

கொல்கத்தா செட்

படத்தின் மைனஸ்

இயக்குனர் சிறுத்தை சிவா

பல இடங்களில் டிவி சீரியல் பார்த்த ஃபீலிங்.

அண்ணன் தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகள் பெரிதாக ரசிக்கும் படி இல்லை.

மொத்தத்தில் விஜய் திருப்பாச்சியையும் அஜித்தின் வேதாளம் மற்றும் விஸ்வாசத்தையும் மிக்ஸ் பண்ணி அண்ணாத்த என்று பெயர் வைத்து மிக்ஸியில் போட்டு அடித்து உள்ளார் இயக்குனர்.

இயக்குனர் பற்றி குறைகள் கூறுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ரஜினியை வைத்து நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று கனவில் இருக்கும் பல இயக்குனர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கிறது என்றால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். விவேகம் என்ற படத்திற்கு விமர்சனம் வரவில்லை என்றால் சிவாவிடம் இருந்து விஸ்வாசம் என்ற பெஸ்ட் திரைப்படம் கிடைத்திருக்காது.

மொத்தத்தில் அண்ணாத்த என்னாத்த சொல்லப் போங்க என்று தான் இருக்கிறது.

ரேட்டிங்: 2/5

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles