Saturday, May 4, 2024
-- Advertisement--

லியோ பற்றி ரஜினியிடம் திரும்ப திரும்ப கேட்ட பத்திரிக்கையாளர்கள்…!!! ரஜினி சொன்ன ஒரே பதில்..!!!

லியோ திரைப்படம் வெற்றி அடைய ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் மட்டும் அல்ல வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன் புக்கிங்ல் சாதனைகளும் செய்து உள்ளது. படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு block o blockbuster என்று கூறி உள்ளார்.

லியோ திரைப்படத்தின் இயக்கினார் லோகேஷ் அவர்கள் லியோ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.

ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து கொண்டு இருக்கிறார். தற்பொழுது கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்று ஷூட்டிங் முடித்து கொண்டு தூத்துக்குடி ஏர்போர்ட்க்கு வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர் அப்போது தனது ஷூட்டிங் அனுபவம் பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார் அன்பான மனிதர்கள் அவர்களை பார்க்கவே மகிழ்ச்சியை இருந்தது எல்லோரோடையும் புகைப்படம் எடுக்கவில்லை என்பது எனக்கே வருத்தமாக இருந்தது என்று பேசி கொண்டு இருந்த ரஜினியிடம் திடீர் என்று பத்திரிக்கையாளர்கள் சார் விஜய் படம் எப்படி இருக்குனு நினைக்கிறிங்க சார் என்று கேட்டதுக்கு மிக பெரிய வெற்றி அடையனும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

மீண்டும் அவரிடம் பத்திரிகையாளர்கள் சார் விஜய் நடிச்ச லியோ படம் 19 தேதி பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது அது பற்றி உங்க கருத்து என்ன என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்தார்கள் அதற்கு ரஜினி ஆமாங்க அந்த படம் மிக பெரிய வெற்றி அடையணும்னு நான் ஆண்டவனை வேண்டுகிறேன் என்று கூறிவிட்டு சென்றார் ரஜினி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles