Saturday, April 27, 2024
-- Advertisement--

‘JAILER’ MOVIE REVIEW: படம் எப்படி இருக்கு தெரியுமா ?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, மிர்னா, விநாயகன், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் இன்று காலை JAILER திரைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றாலே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. JAILER திரைப்படத்திலும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் தனக்கென்று உரிய பாணியில் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற JAILER. அவரது மகனாக வசந்த் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார். ரஜினிக்கு பேரனாக ரித்து ராக்ஸ் ரித்விக் அருமையான நடிப்பு.

Rajinikanth Jailer Movie Stills HD

படத்தின் முக்கிய வில்லனாக மலையாள பட நடிகர் விநாயகம் நடித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கில் வில்லனுக்கு எதிராக போராடுகிறார் வசந்த் ரவி. இந்த போராட்டத்தில் வசந்த் ரவி கடத்தப்படுகிறார். படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் தனக்கென்று ஸ்டைலை காட்டியுள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் தனக்கு உண்டான பாணியில் காமெடிகளோடு நகர்த்தியுள்ளார்.

இரண்டாம் பாதியில் தன் மகனை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையின் போராட்டம். இரண்டாம் பாதி பிளாஷ் பேக் உடன் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் உள்ளது. கண்டிப்பாக பிளாஷ் பேக் காட்சியில் ரஜினியின் கெட்டப் அவரை 30 வயது குறைத்தது போல இருந்தது அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் ரஜினி. நெல்சன் கேஸ் பேக் காட்சியை அதிகமாக வைத்தால் லிங்கா நிலமை வந்துவிடும் என்று நன்றாக புரிந்து கொண்டு அளவாக வைத்திருக்கிறார். படத்தில் கிளைமாக்ஸ் நெருங்கும் போது வரும் சண்டைக்காட்சி தியேட்டரே அதகளம்ஆகிறது. அந்த அளவிற்கு செம மாஸ். இப்படி ஒரு ராவான படத்தை கொடுத்த நெல்சன் கடைசியில் ஒரு டீச்சிங் கிளைமாக்ஸ் வைத்து முடிக்கிறார்.

பிளஸ்:

Vinayakam அருமையான வில்லனை தமிழ் சினிமாவிற்கு மீண்டும் கொண்டு வந்தது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் Cameo Role செம மாஸ்.

சூப்பர் ஸ்டாரின் எனர்ஜியான நடிப்பும் நெல்சனின் இயக்கமும்.

படத்திற்கு இரண்டாவது ஹீரோ என்றால் கண்டிப்பாக அது அனிருத் தான் அந்த அளவுக்கு தனது இசையால் படத்தை தூக்கி வேறொரு தரத்திற்கு நிறுத்தியுள்ளார்.

தமன்னாவின் காவாலா நடன அசைவுகள்.

PRE-CLIMAX சண்டை காட்சி.

ரஜினிக்கு பேரனாக ரித்து ராக்ஸ் ரித்விக் அருமையான நடிப்பு.

Jailer Rajinikanth Movie Images HD

மைனஸ்:
இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு

நீண்ட நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ஒரு உண்மையான தரமான பிளாக்பஸ்டர் திரைப்படம் இந்த jailer.

Rajinikanth Jailer Movie HD Photos

JAICHITAA NELSAAAAA

Rating: 3.75/5

Verdict: BLOCKBUSTER

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles