Monday, May 6, 2024
-- Advertisement--

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படமான அண்ணாத்த பட ரீலீஸ்…! ரசிகர்கள் குஷி..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. இவர் சாதாரண பேருந்து நடத்துனராக இருந்து பின் சினிமாவில் நடிக்க தொடங்கி சிறு கதாபாத்திரங்கள், வில்லன் என இருந்து வந்தார்.

இந்நிலையில் இவர் நடித்த ஒரு சில படங்களிலே இவருக்கு கதாநாயகன் வாய்ப்பு இயக்குனர் கே. பாலசந்தர் மூலமாக கிடைத்தது. முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போக இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார்.

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் இவர் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் படங்களை தேர்வு செய்வார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தர்பார் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், இவர் நடிப்பு மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த, வீரம்,விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு முன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துவிட்டது.

இப்படத்தின் ரீலீஸ் தீபாவளிக்கு என்று நினைத்திருந்த நிலையில், தற்போது இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் என இப்படத்தை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles