Friday, May 3, 2024
-- Advertisement--

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது தவறு அல்ல..!!! தமிழக சட்டசபையில் தெளிவான விளக்கம் கொடுத்து அசத்திய ஸ்டாலின்..!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். அதுபோல தன்னுடைய ஆலோசனை மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் ஆலோசனைகளையும் கேட்டு முடிவு எடுத்து வரும் அவர் சமீபகாலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அவரது அனைத்து அறிக்கைகளில் அறிவித்து வருகிறார்.

மக்களும் தற்பொழுது மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூற தொடங்கியிருக்கும் நிலையில் ஸ்டாலின் அவர்கள் எப்படி மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லலாம் என்று பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் அதுமட்டுமல்லாமல் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கிறார்கள் தற்போது தமிழ்நாட்டில் தரமற்ற அரசியல் நிலவி வருகிறது என்று கூறியதோடு மத்திய அரசை பாரத பேரரசு என்று அழைக்குமாறு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிலர் திமுகவினர் தேவையில்லாமல் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு விவாதமே நடத்தி வந்தனர்.

இந்த விஷயம் ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு செல்ல தமிழக சட்டசபையில் அதற்கான தெளிவான விளக்கத்தையும் கொடுத்து உள்ளார் அதில் ஒன்றிய அரசு என்று சொல்லுவதை ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம் அப்படி சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அது முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்படுகிறதோ அதை தான் நாங்கள் சொல்கிறோம் நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் வரி பாரதம் மாநிலங்களைக் கொண்ட ஒர் ஒன்றியம் ஆக இருக்கும் என்றுதான் கூறுகிறது. அதை தான் பயன்படுத்துகிறோம்.

அதுதான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாதவற்றை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல. மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் அதனுடைய பொருள் என்று தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒன்றியம் என்ற சொல்லில் தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது அதனால் தான் பயன்படுத்துகிறோம் பயன்படுத்துவோம் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

எனவே ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவை இல்லை அந்த வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது என்று தெளிவான விளக்கத்தை கொடுத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles