போதைப்பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகை நிக்கி கல்ராணி அவர்களின் சகோதரி சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து ஹிந்தி நடிகை ரியா மற்றும் கன்னட நடிகை ராகினி திவேதி போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர் நடிகைகள் பட்டியல் ஒரு பக்கம் ரெடி ஆகிக் கொண்டிருக்க இன்னொரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி. திரையுலக பிரபலங்களின் பாலியல் குற்றங்களை தைரியமாக வெளியிடும் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் போதைப் பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்களின் பெயர்களை நான் வெளியிடுகிறேன் அரசு எனக்கு பாதுகாப்பு கொடுத்தால் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் நடனப் போட்டிகள் மற்றும் பிரபலங்கள் நடத்தும் பாத்திகளில் போதைப் பொருள் இல்லாத பாட்டிகளே இல்லை என்றும் பல ஒழுக்கக்கேடான சம்பவங்களும் நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகையின் பட்டியலை நான் வெளியில் இருக்கிறேன் ஆனால் எனக்கு தெலுங்கானா அரசு பாதுகாப்பு அளித்தால் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.