Saturday, May 18, 2024
-- Advertisement--

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யாவின் அக்காவா இது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!!!

ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் உருவான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரிய ஹிட் பாடலாக இருந்தது. ஊதாக்கலரு ரிப்பன் என்றாலே ஸ்ரீதிவ்யா ஞாபகம்தான் இளசுகளுக்கு வரும் அந்த அளவிற்கு அந்தப் பாடல் பெரிய பிரபலத்தை ஸ்ரீதிவ்யாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

sivakarthikeyan sridivya

பார்க்க அழகாகவும் ஹோம்லியாகவும் இருப்பதினால் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, ஈட்டி பென்சில், மருது போன்ற படங்களில் நடித்து வந்தார்.

முதல் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொடுத்த வெற்றியை போல அடுத்தடுத்த படங்கள் தராததால் சற்று வருத்தத்தில் இருந்த ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் செய்து இருந்தார். அதன்பின் சில படங்கள் நடித்து வந்த அவருக்கு பெரிதாக எந்த ஒரு படமும் கைகொடுக்கவில்லை தற்பொழுது ஒத்தைக்கு ஒத்த என்ற அதர்வா படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்பொழுது சினிமாவை விட்டு சற்று விலகி உள்ள ஸ்ரீதிவ்யா அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை இணையத்தில் போஸ்ட் பண்ணி ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார் அத்துடன் தனது அக்கா ஸ்ரீரம்யா உடன் இணைந்து புகைப்படங்களை வெளியிடுவது வெளியில் செல்வது என்று இருக்கிறார் ஸ்ரீதிவ்யா.

ஸ்ரீதிவ்யாவின் அக்கா ஸ்ரீரம்யா சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். யமுனா என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் அதில் ஸ்ரீரம்யா காட்டிய கவர்ச்சி அடேங்கப்பா என்று சொல்லுமளவிற்கு இருந்தது.

தற்பொழுது ஸ்ரீரம்யா தனது தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்க்கையில் ஸ்ரீதிவ்யாவின் அக்காவா இது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டார்களே என்று புகைப்படத்தை சேர் செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles