Saturday, May 18, 2024
-- Advertisement--

சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன் இப்படிலாம் நடித்தாரா ஸ்ரீதிவ்யா..!!! இணையத்தில் வைரலாகும் கிளிப்பிங்.

நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இளசுகளின் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர். “ஊதா கலரு ரிப்பன்” என்ற பாடல் எங்கு கேட்டாலும் ஸ்ரீதிவ்யாவின் நினைவுதான் வரும் அந்த அளவிற்கு அந்த ஒரே படத்தின் மூலம் பெரிய பிரபலம் அடைந்தார். ஹோம்லியான இவரது முகபாவனை தமிழில் ஒரு பெரிய மார்க்கெட் இவருக்கு இருக்கும் என்று அனைத்து தரப்பு ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்டது.

அவருடைய நேரமோ என்னமோ தெரியவில்லை “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்திற்குப் பிறகு மாபெரும் வெற்றியை எந்த படங்களும் பெறவில்லை .

ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும் கிளாமரான சப்ஜெக்ட்டும் நிறைந்த ஹீரோயின் ரோல் வந்ததால் பல படங்களை தவிர்த்து வந்தார். நல்ல கதைகளை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் எல்லா படங்களும் தனது முதல் படம் கொடுத்த வெற்றியை கொடுக்காததால் அவரால் முன்னணி நடிகை பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

ஸ்ரீதிவ்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “Thoorpu Velle Railu ” என்ற சீரியலில் ஒரு குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்பொழுது அவர் நடித்த அந்த சீரியலின் வீடியோ கிளிப்பிங் இணையத்தில் பரவி வருகிறது.

ஸ்ரீதிவ்யா நடித்த தெலுங்கு சீரியலை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

serial link : https://youtu.be/MWYn_y3REqs

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles