கொரோனா நோய் தோற்று காரணமாக தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது நாளுக்கு நாள் கொரோனா ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது அரசு.
இந்நிலையில் 2 ,600 சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு தமிழக அரசு 4 ரயில்களை மட்டும் இயக்கி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அது மட்டும் அல்லமால் ரயில்களில் AC இருக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை தெற்கு ரயில்வே பரிந்துரை விளங்கி உள்ளது.
இந்த வழித்தடங்களில் தான் 4 சிறப்பு ரயில் அரசு அனுமதித்து உள்ளது.
திருச்சி – நாகர்கோவில்
விழுப்புரம் – மதுரை
கோவை – காட்பாடி
கோவை – மயிலாடுதுறை