Friday, May 17, 2024
-- Advertisement--

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16221 சிறப்பு பேருந்துகள்..!!! ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலித்தல் இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக முழுவதும் 16 221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 4078 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் அத்துடன் தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2050 பேருந்துகளையும் சேர்த்து மூன்று நாட்களில் சென்னையிலிருந்து 10,228 பேருந்துகள் மற்ற ஊர்களில் இருந்து 5993 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதுபோல சென்னை பண்டிகை முடிந்ததும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை வழக்கமாக 2050 பேருந்துகள் உடன் 3393 சிறப்பு பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு 5727 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15270 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் பேருந்துகளில் இயக்கம் குறித்து அறிந்துகொள்வதற்கு இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு 9445014450 , 9445014436 ஆகிய தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles