சூரிய கிரகணம் சந்திர கிரகணம் என்பது சாதாரணமான இயற்கை நிகழ்வுதான் என்றாலும் அது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வழக்கமான சூரிய கிரகணத்தைப் போல நாளை சூரிய கிரகணம் இல்லை என்றும், இது மிகவும் ஆபத்தான சூரிய கிரகணம் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் காலை 9.15 மணிக்கு தொடங்கி மாலை 3.4 மணிக்கு கிரகணம் முடிகிறது முழு சூரியகிரகணம் 12.10க்கு தெரியும்.
மேலும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் நாம் தமிழக மக்கள் பார்க்க முடியாது, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர காண்ட் போன்ற மாநிலங்களிலும் முழுமையான கிரகணத்தை பார்க்க முடியும். நமது சென்னையில் 10:20 தொடங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 1. 41 வரை நீடிக்கும்.
அதிகபட்ச கிரகணம் 12:00 மணிக்கு நிகழும் வெறும் கண்களாலும், தொலைநோக்கியை பயன்படுத்தியோ இந்த சூரிய கிரணத்தில் கட்டாயம் நாம் பார்க்கக் கூடாது என்று ஆய்வு நிபுணர்கள் கூறுகின்றனர். கண்களின் விழித்திரையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் என்பதால் சூரிய கிரகணத்தை பார்ப்பதை நம் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.