Sunday, May 19, 2024
-- Advertisement--

ஆஸ்கார் சென்றதை அடுத்து சூர்யாவின் சூரரை போற்று படம் செய்த மாபெரும் சாதனை..!!! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஓ டி டி தளத்தில் வெளியாகின.

ஓடி டி தளத்தில் வெளியாகி முதல் முறையாக அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் சூரரை போற்று நடிகர் சூர்யா நல்ல கதையம்சத்துடன் உள்ள கதாபாத்திரத்தையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இந்தப் படம் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது நடிகர் சூர்யாவின் இயல்பான நடிப்பு நல்ல முறையில் பலராலும் பேசப்பட்டது.

இயக்குனர் சுதா கொங்கரா டெக்கான் ஏர்லைன்ஸ் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார் இந்த திரைப்படம் ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்று இருந்தது தமிழ் சினிமா ஆஸ்கார் பரிந்துரை பட்டியல் வரைக்கும் சென்றது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

தற்போது ஷாங்காய் இன்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவல் சூரரைப் போற்று திரைப்படத்தை மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்து உள்ளது கொரோனா காலகட்டம் என்பதால் ஷாங்காய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் பாதுகாப்பான முறையில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர்.

சூரரைப்போற்று திரைப்படம் ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.1 புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளது ஆகையால் ஷாங்காய் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் தேர்ந்தெடுக்கப்பட்டதில் 1000 திரைப்படங்களில் மூன்றாவதாக இடம்பெற்றது மிகப்பெரிய சாதனையாகும் படக்குழுவினர் மகிழ்ச்சியாக கருதுகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles