சமீபகாலமாக பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். சாதாரண கூலி தொழிலாளி தொடங்கி வானத்தை தொடும் அளவிற்கு எல்லா துறைகளிலும் பெண்கள் தற்பொழுது சிறந்து விளங்குகின்றனர். பெண்களுக்கான அத்தியாவசியமும் பெண்களுக்கான உரிமையும் சமீப காலமாக கூடுதலாகவே கிடைத்து வருகிறது.

அதுபோல சினிமாக்களில் கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பெண் இயக்குனர்கள் உள்ளனர். அதில் வெற்றி அடைந்த இயக்குனர்கள் ஒருவர் சுதா கொங்காரா.
நடிகர் மாதவனை வைத்து இறுதிச்சுற்று என்ற படத்தை தனது அறிமுக படமாக இயக்கினார். முதல் படத்தில் பல இயக்குனர்கள் திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த இயக்குனராக விளங்கினார். பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா அதனை அடுத்து முன்னணி நடிகர்களில் வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

விஜய் சேதுபதி மற்றும் மாதவனை வைத்து விக்ரம் வேதா படத்தை இயக்கினார். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற பாடத்தை இயக்கினார். சூரரைப் போற்று படத்திற்கு ஐந்து தேசிய விருது கிடைத்தது.
தற்போது சூரரைப் போற்றி ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதா. அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார் . மற்றும் சூர்யா கேமியோ ரோல் வருகிறார். பிசியாக இருக்கும் சுதா சமீபத்தில் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்த சுதா தற்போது அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது இணைய பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்கு வலிக்கிறது, மிகவும் வேதனையாக இருக்கிறது ஒரு மாதம் இதற்காக நான் ஓய்வு பெற்று வருகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் கூறி விரைவில் குணமடைவீர்கள் என்று பதில் பதிவிட்டு வருகின்றனர்.