Saturday, May 18, 2024
-- Advertisement--

தாயை வீட்டு சிறையில் அடைத்த மகன்கள்…!!! நாய்க்கு வீசுவதுபோல் பிஸ்கட் வீசிய கொடூரம்..

தஞ்சை காவிரி நகர் 5வது தெரு சேர்ந்தவர் திருஞானம் தூர்தர்ஷன் சேனல் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ஞானஜோதி 78 அவர்களது மகன்கள் சண்முகசுந்தரம்50 வெங்கடேசன்45 மூத்த மகன் சண்முகசுந்தரம் சென்னையில் காவல் துறையில் டெக்னிக்கல் பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். இரண்டாவது மகன் வெங்கடேசன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணியாற்றுகிறார்.

ஞானஜோதி குடும்ப ஓய்வூதியமாக ரூ. 30 ஆயிரம் வருகிறது. சொத்து பிரச்சினை காரணமாக இரண்டு மகன்களும் தாய் ஞானஜோதி கவனிக்காமல் கை விட்டதுடன் அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து வெளிகேட்டை பூட்டினர். இதனால் வீட்டுக்குள் அடைபட்ட ஞானஜோதி மனநலம் பாதிக்கப்பட்டார். எப்போதாவது மகன்கள் பிஸ்கட் வாங்கி வந்து கேட் வழியாக தூக்கி வீட்டுக்குள் வீசி செல்வர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டால் அவர்களிடம் இரண்டு மகன்களும் தகராறு செய்தனர். இதனால் அக்கம் பக்கத்தினர் கண்டுகொள்ளாமல் விட்டனர். மனிதநேயமிக்க அப்பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அவ்வப்போது ஞானஜோதி உணவு வழங்கி வந்தனர். சரியான உணவு இல்லாததாலும் தனிமையாக இருந்ததாலும் மனநலம் பாதிக்கப்பட்ட ஞானஜோதி எலும்பும் தோலுமாக மாறினார்.

தண்ணீர், உணவு கிடைக்காமல் கீழே கிடந்த மண்ணை தின்றும் வாழ்ந்து வந்தார். இதை வீடியோவாக எடுத்த சமூகநல ஆர்வலர் ஜெயச்சந்திரன் தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் அனுப்பினார். வீடியோவை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூகநலத் துறைக்கு உத்தரவிட்டார். சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா தலைமையிலான குழுவினரும் தமிழ் பல்கலைக்கழக போலீசாரும நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்கு சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து ஞானஜோதியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூதாட்டியான ஜோதியை மீட்பதற்காக வந்த அதிகாரிகளிடம் மூத்த மகன் சண்முகசுந்தரம் சொத்தையும், பென்ஷன் பணம் ரூபாய் 30,000 தம்பி எடுத்துக் கொள்வதாக கூறி வாக்குவாதம் செய்தார்.

அவர் தனது தாயின் நிலை குறித்து கொஞ்சம் இரக்கமில்லாமல் பேசியதை கண்டு அப்பகுதியினர் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். பெற்ற தாயை பரிதவிக்க விட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதை எடுத்து சமூகநலத் துறையினர் புகாரின் பெயரில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles