விளையாட்டு மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கையில் ஒரு செல் போன் இருந்தால் போதும் உடனே அதில் என்ன கேம் இருக்கு என்று தெரிந்து கொண்டு மற்றொருவர் அனுமதியின்றி விளையாடும் அளவிற்கு சிறுவர்கள் என்று மிகவும் கேம் மோகத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்நிலையில் பப்ஜி கேம் விளையாட்டு விளையாடும் பொழுது மாரடைப்பு வந்து இறந்து உள்ளார் ஒரு மாணவன். ஈரோடு கருங்கல்பாளையம் அருகே உள்ள கமலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு வயது 16 பாலிடெக்னிக் படித்து வரும் இவர் ஊரடங்கு காரணமாக எப்பொழுதும் மொபைலும் கையுமாக இருந்துள்ளார். மொபைலில் பப்ஜி கேம் விளையாடி உள்ளவரை பலமுறை எச்சரித்துள்ளனர்,அனால் அவர் கேட்கவே இல்லை.
இந்நிலையில் நேற்று மதியம் நான் நண்பர்களுடன் சேர்ந்து மாட்டுச் சந்தை திடலில் உட்கார்ந்து வழக்கம்போல் பப்ஜி கேம் விளையாடி உள்ளார். அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் மயங்கி விழ அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இவர் மாரடைப்பால் இறந்து இருக்கலாம் எனவும் வயதை விட அதிக உடல் எடை உள்ளதால் மாரடைப்பு வந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் இவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தெரியவரும். வீட்டில் இருக்கும் சிறியவர்கள் மாணவர்கள் நல்ல வழியில் பொழுதைக் கழிக்காமல் இவ்வாறு தேவையற்ற விஷயங்களில் பொழுதை கழிப்பதால் விபரீதம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு சதீஷ்குமார் ஒரு எடுத்துக்காட்டு.