Friday, April 26, 2024
-- Advertisement--

வசீகரமான முகத்தோற்றத்தை பெற ஆரோக்கியமான வழி முறைகள் இதோ..!!! TRY பண்ணி பாருங்களேன்.

முகம் பார்க்க அழகாக இருக்க வேண்டும் பள பளவென்று இருக்க வேண்டும் என்று நம்மில் பலர் வெளியில் செல்லாமலே ஏசி ரூம்குள்ளே தனது வாழ்க்கையை கழித்து வருகிறோம். ஐடி கம்பெனில வேலை பார்க்கிறவங்களா அவங்களுக்கு என்னப்பா ஏசி ல வேலை பார்க்குறாங்க அழகா தான் இருப்பாங்க என்கிற எண்ணம் அதிகம் இருக்கு.

உண்மை என்னவென்றால் நம்முடைய சருமத்தில் வெயில் பட வேண்டும் வெயில் பட்டால் மட்டுமே நமது சருமம் விரைவில் முதுமை அடையாமல் இருக்கும்.

Good Morning Sunshine!

அதுவும் காலையில் சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி தான் நமது சருமத்திற்கு நல்லது. குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் ஆவது காலை சூரிய ஒளியில் தினமும் நமது முகத்தை காட்ட வேண்டும்.

அதுபோல உணவை தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம் நாம் காலம் மாறிப்போக ஜங்க் உணவு வகைகள், ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தில் இருக்கிறோம். ஃபாஸ்ட் ஃபுட்மற்றும் ஜங்க் ஃபுட் உணவுகள் நம் உடலுக்கு கேடு விளைவிப்பதோடு தேவையற்ற கொழுப்புகளையும் உடலில் சேர்த்து விடுகிறது அதனால் உடல் எடை போதும் போது முகத்திலும் சதைகள் போட்டு விடுகிறது.

சிலர் தண்ணீர் அதிகமாக குடிக்கமாட்டார்கள். நமது உடலுக்கு தேவையான நீரை நாம் அருந்தாமல் இருந்தால் கூட சரும பிரச்சனைகள் வரும். காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.

இன்றைய தலைமுறையினர் செல்போனை அதிகம் உபயோகித்து வருகிறார்கள் செல்போனில் பயன்பாடு அதிகம் இருப்பதால் இரவு நேர தூக்கம் தடைப்படும். இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டிய நாம் இரவில் செல்போன் பயன்படுத்தி கொண்டு இரவு 12 மணிக்கு தூங்கி மறுநாள் காலை 10 மணிக்கு எழுப்புகிறோம் தொடர்ந்து இதனை செய்வதால் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுகிறது நரம்புமண்டலத்திலும் பிரச்சனைகள் வருகிறது.

முக அழகு நன்றாக இருக்க வேண்டும் என்றால் உடல் நன்றாக இருக்க வேண்டும் தினமும் காலை ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி அவசியம் உடம்புக்கு ரத்த ஓட்டம் செல்வதோடு தூய்மையான ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கும். வியர்வை வெளியேறி சருமம் அதிக பொலிவுடன் காணப்படும்.

கடைகளில் விற்கும் அழகு சாதன பொருட்களை கிரீம்களை முகத்தில் வாங்கி பூசி கொள்வதை விட நம் முன்னோர்கள் பயன்படுத்திய கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை பொடி, பயத்தம் பருப்பு, உலந்த எலுமிச்சை தோல், முல்தானி மட்டி போன்றவை பயன்படுத்தி பார்க்கலாம்.

ரோஸ் வாட்டர் முகத்தில் தடவி வாரம் ஒரு முறை வந்தால் மாற்றம் தெரியும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles