சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தை அமீர்கான் வெளியிடுவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள படம் அயலான்.
இதில் ராகுல் ப்ரீத் சிங், ஈஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ், ஏ எம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளன.
ஏலியன் ஒன்று பூமிக்கு வந்து சிவகார்த்திகேயனுடன் நட்பாவது தான் இந்த படத்தின் கதை ஆகும். இதில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதிலேயே பட குழு ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மும்பைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அமீர்கானை சந்தித்து பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
அப்போது அயலான் படத்தை பற்றி அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இதை எடுத்து அமீர்கான் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஹிந்தியில் வெளியிட அமீர்கானின் பட நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனாலேயே தான் அவரது பட நிறுவனம் தியேட்டரில் வெளியிட்டுள்ளதாம்.
Wishing you all the love and success @Siva_Kartikeyan for your upcoming release 'Ayalaan' 🤗👏🏻👏🏻Congratulations!!! Keep shining! 💫💫@arrahman @Ravikumar_Dir @kjr_studios @24amstudios @Rakulpreet @SharadK7 @ishakonnects @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben pic.twitter.com/sh5VIuAmGv
— Aamir Khan Productions (@AKPPL_Official) May 1, 2023