Friday, May 3, 2024
-- Advertisement--

குடும்ப வறுமையால் பஞ்சர் கடையில் வேலை பார்த்த பெண்ணின் கல்வி கனவை நினைவாக்கிய சிவகார்த்திகேயன்..!!! நெகிழ்ச்சி சம்பவம்.

சிவகார்த்திகேயன் தமிழில் முன்னணி நடிகர் வளர்ந்து வரும் நடிகர் இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்று வருகிறது. ரஜினி விஜய்யின் பார்முலாவை கெட்டியாக பிடித்துக்கொண்ட சிவகார்த்திகேயன் தற்பொழுது சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

சத்தமில்லாமல் நிறைய உதவிகளையும் செய்து வருகிறார் குறிப்பாக பிரபலங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மருத்துவச் செலவு மற்றும் வறுமையில் கஷ்டப்படும் குழந்தைகளின் படிப்புச் செலவையும் ஏற்று பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த தேவசங்கரி என்ற பெண் தனது 12ஆம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தின் வறுமை நிலையினால் இருசக்கான வாகனத்திற்கு பஞ்சர் ஓட்டும் வேலையை செய்து வந்தார். நர்சிங் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் குடும்ப வறுமை காரணத்தால் அவரால் படிக்க முடியாமல் டூ வீலர் பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த தகவல் பிரபல மாத இதழ் மூலம் சிவகார்த்திகேயன் பார்வைக்கு போக சிவகார்த்திகேயன் தனது நண்பர் மூலம் அந்தப் பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சிவகார்த்திகேயன் தேவசங்கரியிடம் பேசியிருக்கிறார்.

நீங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு தேவசங்கரி சிவகார்த்திகேயனிடம் நர்சிங் படிக்க விரும்பியதாக கூறியிருக்கிறார் உடனே சிவகார்த்திகேயன் நாகப்பட்டினத்தில் உள்ள SIR ISSAC NEWTON NURSING கல்லூரியில் நர்சிங் வகுப்பில் அவரை சேர்த்துள்ளார். நன்றாக படியுங்கள் உங்கள் படிப்பு செலவை பற்றி கவலைப்படாதீர்கள் என்று ஆறுதலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தேவசங்கரி சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்தும் சிவகார்த்திகேயன் அண்ணன் தயவில் தான் நர்சிங் வகுப்பில் சேர்ந்து விட்டேன் என்றும் சமீபத்தில் பொங்கலுக்கு எங்கள் வீட்டில் எல்லோரும் சிவகார்த்திகேயன் அண்ணண் தான் புத்தாடைகளை எடுத்து கொடுத்தார்கள் என்று கூறி உள்ளார்.

ஏழை பெண்ணின் நிலையை வெளி உலகிற்கு கொண்டு வந்து உதவிய ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்.

News Credit: Ananda Vikatan

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles