Friday, May 3, 2024
-- Advertisement--

கோலமாவு கோகிலா பாணியில் மிஸ்கின் பட சாயலில் பெண்களை காப்பாற்றும் டாக்டர்..!!! வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் ட்ரைலர்.

சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியில் பணிபுரிந்த இவர் மெரினா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி படிப்படியாக முன்னேறி தற்போது தயாரிப்பாளர்களின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தளபதி விஜய் பாணியில் சிவகார்த்திகேயனும் கமர்சியல் ஃபார்முலாவை கையில் வைத்துக் கொண்டு சினிமாவில் ஒரு பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் டாக்டர் இந்தப் படம் அக்டோபர் 9ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை அவரது ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்களோ இல்லையோ தளபதி விஜய்யின் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்து வருகின்றனர் காரணம் டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் டிலிப்குமர் தான் தற்போது விஜய்யின் அடுத்த படமான பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே கோலமாவு கோகிலா எடுத்த அவர் டாக்டர் படத்தை எப்படி எடுத்துள்ளார் என்பதை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர் இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

டாக்டர் படத்தின் ட்ரெய்லர் பார்க்கையில் கோலமாவு கோகிலா படத்தின பிளவோரில் மிஷ்கின் படம் சாயலில் இருக்கிறது. சிவகார்த்திகேயன் டாக்டராக இந்த படத்தில் நடித்திருக்கிறார். நடிகர் வினை வில்லனாக நடித்துள்ளார். பெண் பிள்ளைகளை கடத்தும் வில்லன்களிடம் இருந்து ஒரு டாக்டர் எப்படி தந்திரமாக மீட்கிறார் என்பது தான் ட்ரைலரை வைத்து யூகிக்க முடிந்த கதை. சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக நெல்சன் சொல்லி இருந்தால் கண்டிப்பாக இந்த டாக்டரை பார்க்க மக்கள் தியேட்டரில் கியூவில் நிற்பார்கள். அக்டோபர் 9 தேதி பார்ப்போம் டாக்டர் என்ன செய்கிறார் என்று. படக்குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles