Wednesday, May 8, 2024
-- Advertisement--

பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்..!!! வெளியான சூப்பர் அப்டேட்.

பீஸ்ட் தளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து கொண்டே இருக்கிறது. விஜய் படங்கள் என்றாலே நல்ல வசூலை செய்யும் சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படம் நொந்துபோன திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய லாபத்தை கொடுத்ததோடு பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

மாஸ்டருக்கு பிறகு ஒரு வெளியான சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் மனமுடைந்து போன தியேட்டர் உரிமையாளர்கள் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் மீண்டும் நல்ல லாபம் சம்பாதித்தனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியது தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன் டிலிப்குமர் அவர்கள்தான்.

ஒரு சீரியசான கதையில் காமெடி பகுதியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர் தற்பொழுது தளபதி விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கிட்டத்திட்ட இன்னும் 30 நாட்களில் பீஸ்ட் படத்தின் மொத்த சூட்டிங் முடிந்து விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் பீஸ்ட் படத்தில் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும் அந்த பாடலை தளபதி விஜய் பாடி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் தளபதி விஜய் குரலில் கேட்போம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட் பாடலாக அமையும் என்று படக்குழுவினர்கள் கூறிவரும் நிலையில் போன வாரம் சிவகார்த்திகேயன் தளபதி விஜய் சந்தித்துப் பேசியுள்ளார்கள். சிவகார்த்திகேயனின் DON படமும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படமும் கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.

தளபதி விஜயின் பீஸ்ட் பட சூட்டிங் அங்கு நடப்பதை தெரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் DON படத்தின் சூட்டிங் முடிந்த பின்பு தளபதி விஜய்யை நேரில் சந்தித்து அவருடன் பேசி மகிழ்ந்துள்ளார்.

புகைப்படங்களும் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தளபதியுடன் இருக்கும் புகைப்படத்தில் சிவா வெளியிடுவாரா பார்ப்போம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles