Saturday, May 4, 2024
-- Advertisement--

நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் கார்த்தி..!!! சபாஷ் சரியான போட்டி..!!! ஜெயிக்கப்போவது யார்..?

தீபாவளி என்றாலே ஸ்டார்களில் திரைப்படங்கள் போட்டி போட்டுக்கொண்டு திரைக்கு வரும். தீபாவளி பண்டிகை அன்று விஜய் அல்லது அஜித் படங்கள் வெளியானால் தியேட்டரில் திருவிழா கோலத்தில் இருக்கும்.

பொதுவாக தீபாவளிக்கு விஜய் திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். விஜய் நடித்து வரும் வாரிசு சூட்டிங் சென்று கொண்டிருப்பதால் தீபாவளிக்கு வரவில்லை பொங்கலுக்கு வருகிறோம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் தரப்பிலிருந்து அறிவித்தார்கள்.

அஜித் வினோத் இயக்கத்தில் பரபரப்பாக உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நமக்கு கிடைத்த தகவல் படி அஜித்தின் திரைப்படம் தீபாவளிக்கு பிறகு தான் திரைக்கு வருமாம். பொங்கலுக்கு பிறகு தான் அஜித் படம் என்று தகவல்.

சரி இந்த தீபாவளிக்கு யார் திரைப்படங்கள் வெளிவர உள்ளது என்று விசாரிக்கையில் சிவகார்த்திகேயனின் PRINCE திரைப்படம் தீபாவளிக்கு வருகிறதாம் இதனை பிரின்ஸ் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். சோலோவாக சிவகார்த்திகேயன் திரைப்படம் வருகிறதா என்று அனைவரும் ஆச்சரயத்தில் இருந்த நேரத்தில் கார்த்தி மித்ரன் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கும் சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தீபாவளி ரேஸில் யார் போட்டி போடப் போகிறார்கள் என்று பார்க்கையில் சிவகார்த்திகேயனும் கார்த்திக்கு தான் இந்த தீபாவளி ரேஸ். சிவகார்த்திகேயனின் PRINCE படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள் அதே நேரத்தில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் கார்த்தி கேரியரில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் யார் ஜெயிக்கிறார்கள் என்று.

இன்னும் சில படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles