Friday, May 3, 2024
-- Advertisement--

தளபதி விஜய் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா..? இணையத்தில் கசிந்து வரும் தகவல்..!!!

தமிழ் சினிமாவில் பாகுபலி-2 ரெக்கார்டை முறியடிக்க முடியாமல் தவித்து வந்தது தமிழ் படங்கள். அந்த அளவுக்கு பிரம்மாண்ட வசூல் செய்தது பாகுபலி 2. தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பாகுபலி இரண்டாம் பாகத்தின் வசூலைப் மிஞ்சியுள்ளது.

மாபெரும் பிரம்மாண்ட வசூலை மிஞ்சிய உடன் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகத்தினர் மாஸ்டரை கொண்டாடி வந்தனர். விஜய்யின் மாஸ்டர் மாபெரும் வசூல் சாதனை செய்த பின் விஜய்யின் அடுத்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மாஸ்டர் படத்தை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளிலும் ரிலீஸ் செய்தார்கள் இதனால் விஜய்யின் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது அதேபோல விஜய்யின் அடுத்தப் படத்தையும் பான் இந்தியா படமாக வெளியிட முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். விஜய் நெல்சன் இணையும் தளபதி சித்தி என்ற பெயர் சூட்டப்படாத படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.

Vijay Sarkar Movie HD Images

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான சர்கார் விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் விஜயின் அடுத்த படத்திற்கான லுக் டெஸ்ட் செய்து இருக்கிறார்கள். மாஸ்டர் விஜயின் கெட்டப்பை கொஞ்சம் மாற்றி லுக் டெஸ்ட் செய்தார்களாம் விஜயின் தோற்றம் நன்றாக வந்துள்ளது என தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்று முன்னதாகவே தகவல்கள் வெளிவந்தது. பூஜா ஹெக்டே மற்றும் மற்றொரு கதாநாயகியும் இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவர ஆரம்பித்தது. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா விஜயுடன் இணைகிறார் என்று தெலுங்கு நாளிதழ் ஒன்றில் செய்திகள் வெளிவந்தது.

sivakarthikeyan vijay

இது ஒருபுறமிருக்க விஜய்யுடன் இணையும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று செய்திகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. நெல்சன் சிவகார்த்திகேயன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். நெல்சன் முதல் முதலில் வேட்டை மன்னன் என்ற படத்தை சிம்புவை ஹீரோவாக வைத்து இயக்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது நெல்சன் இடம் துணை இயக்குனராக பணிபுரிந்தார் சிவகார்த்திகேயன் ஆனால் அந்தப் படம் பாதியில் நின்று போனது.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய நெல்சன் பலரை சத்தமில்லாமல் தூக்கி விட்டுள்ளார். கோலமாவு கோகிலா படத்தை நயன்தாராவிற்கு வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது அந்த படம் ஓரளவு சுமாராக போக சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை கொடுத்தார் அந்த படம்தான் டாக்டர். டாக்டர் படம் வருகிற மார்ச் 26ஆம் தேதி வெளிவர இருக்கும் இந்நிலையில் விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ளது.

இது குறித்து விஜய் தரப்பில் கேட்டதற்கு அப்படியா இந்த அப்டேட் எங்களுக்கே தெரியாதே என்று ஆச்சரியப்படுகின்றனர்.

நெல்சன் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள் தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் கதை சிவகார்த்திகேயனுக்கு நன்கு தெரியும். சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்கு உதவியாக இருப்பார் அவர் நடிப்பாரா என்பது தெரியவில்லை என்று கூறி வருகின்றனர் சினிமா வட்டாரத்தில்.

தளபதி விஜய் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துவிட்டார் தற்பொழுது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் கமெண்ட் செய்யுங்க.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles