சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டு இருந்தார். இவரது நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் அதும் சிவாவின் கவுண்டர் மக்கள் ரசிக்கும் படி இருக்கும். அதனால் சின்னத்திரைலே சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தார்கள். அதன் பின் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன சிவகார்த்திகேயனுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தளபதி விஜய் படம் போல சிவகார்த்திகேயன் படங்களும் காமர்ஷியல் ஹிட் கொடுத்தது. அதனால் குறைவான பட்ஜெட்டை வைத்து படம் இயக்கி லாபம் பெற நினைத்த தயாரிப்பாளர்கள் அனைவரும் சிவாவின் கால்ஷீட் முன்பே வாங்கி வைத்துள்ளார்களாம்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “குறள் 786 ” என்ற படத்தின் ட்ரைலரை டேக் செய்து அதன் இயக்குனரான சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் எப்போது இந்த “SHORT FILM ” ரிலீஸ் பண்ணுவிங்கனு கேட்டார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் இது குறும் படம் அல்ல.
இதையும் படிங்க : பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடியோ காலில் உம்மமமா கொடுத்தது யாருக்கு தெரியுமா…!!! வெளியான புகைப்படங்கள் உள்ளே.
சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் இதான். இந்த படத்தில் அவருக்கு நல்ல ஒரு அழுத்தமான கதாபாத்திரம். நான் தான் இந்த படத்தை இயக்கினேன். சிவகார்த்திகேயனை அறிமுக படுத்த நினைத்தேன் அனால் எதிர்பாராத விதமாக இந்த படம் ட்ராப் ஆனது. அதன் பின் சிவா “மெரினா” படத்தில் நடித்தார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் பதில் அளித்து இருந்தார்.