Friday, May 17, 2024
-- Advertisement--

கல்லூரி மாணவனாக புதிய அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்…!!! “டான்” First Look இல் மாஸ் கட்டிய சிவா.

சன் பிக்சர்ஸ் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “டான்” திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட் என்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் டாக்டர் படத்தைத் தொடர்ந்து பிரியங்கா மோகன் இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க காமெடி நிறைந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து எஸ்கே புரோடக்சன் தயாரித்துள்ளது. இந்நிலையில் தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த பர்ஸ்ட் லுக்கில் சிவகார்த்திகேயனுக்கு பின்பக்கம் சிவாங்கி, சரவணன் உள்ளிட்டோர் கல்லூரி மாணவர்களாக இடம்பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு கூலாக தோன்றும் சிவகார்த்திகேயன் காண ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த தான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles