Friday, May 3, 2024
-- Advertisement--

DON EXCLUSIVE : சிவகார்த்திகேயனின் DON PILOT வெர்சன் பார்த்த தளபதி விஜய்..!!! DON படத்தின் கதை இது தான்..!!! DON படத்தில் நடித்த 4 பிரபல இயக்குனர்கள்..!!!

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் DON பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மாபெரும் வெற்றி பெற்று திரையரங்கு உரிமையாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

கொரோனா காலகட்டத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் தியேட்டருக்கு ரசிகர்களை கூட்டம் கூட்டமாக வர வைத்தது அதன் பின் வெளியான சில படங்கள் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படத்திற்கு மக்கள் பெரிய ஆதரவைக் கொடுத்து கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்து ரசித்து சென்றனர். மாஸ்டர் படத்திற்கு பிறகு சரியான படம் அமையாததால் நொந்துபோன திரையரங்கு உரிமையாளர்களுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பெரிய ஆறுதலாக இருந்தது.

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் நிலை என்ன என்று எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயனின் அடுத்த படமான DON பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் DON இந்தப்படத்தை அட்லியின் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி அவர்கள் இயக்கியிருக்கிறார். டான் என்ற டைட்டிலை பார்த்தவுடன் இது பெரிய ஆக்ஷன் படம் என்று முடிவு செய்திட வேண்டாம் DON ஜாலியான கலக்கலான ஒரு எமோஷனலான படமாக இருக்குமாம். டான் படம் கண்டிப்பாக அனைவர் வாழ்க்கையிலும் கனெக்ட் பண்ணிக் கொள்ளும் படமாக இருக்குமாம்.

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் 4 இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக சமுத்திரகனி நடித்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறாராம் . பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சிங்கம் புலி அவர்களும் இந்த படத்தில் நடித்து உள்ளார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் பேசாமல் நடித்து இருந்தாரோ அதற்கு மாறாக இந்தப் படத்தில் கூலான ஜாலியான காலேஜ் மாணவராக நடித்துள்ளாராம். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனன் மறுபடியும் நடித்துள்ளாராம் ஆனால் டாக்டர் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தை விட முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம் DON படத்தில்.

சிவாங்கி கல்லூரி மாணவியாக செய்யும் சேட்டைகள் அனைவரும் ரசிக்க வைக்கும்படி இருக்கிறதாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த பின் சிவா தான் இயக்குனரிடம் இந்த கதாபாத்திரத்திற்கு ஷிவாங்கி நன்றாக இருப்பார் என்று சிபாரிசு செய்தாராம்.

டான் படத்தின் ஒன்லைன் என்னவென்றால் ஜாலியான செல்லமான DON ஆக வலம் வரும் சிவகார்த்திகேயன் தன் வாழ்க்கையில் எடுக்கும் அவருடைய தனிப்பட்ட முடிவுகளால் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே தான் படத்தின் ஒன்லைன். படம் ஜாலியாகவும் எமோஷனலாகவும் வந்து உள்ளதாம்.

இந்த படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி அட்லீ அவர்களின் உதவி இயக்குனர் என்பதால் மெர்சல் படத்தில் பணிபுரிந்து வந்து உள்ளார். அப்போது ஓய்வு நேரத்தில் தளபதி விஜயிடம் அண்ணா நா ஒரு பைலட் வெர்சன் அடுத்த படத்திற்காக எடுத்துருக்கேன் பாக்குறீங்களா என்று கேட்டு உள்ளார் அதற்கு தளபதி கொண்டு வா பார்க்கலாம் என்று DON படத்தின் பைலட் வெர்சனை பார்த்தாராம் எமோஷனல் சீன்ஸ் பார்த்துவிட்டு டேய் சூப்பரா இருக்குடா என்று பாராட்டினாராம் அதோடு SJ சூர்யா அவர்களிடம் அந்த வீடியோவை பார்க்க சொன்னாராம். SJ சூர்யா அவர்களும் பார்த்தாராம்.

வருகின்ற டிசம்பர் மாத இறுதிக்குள் DON படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles