Friday, May 3, 2024
-- Advertisement--

அந்தரத்தில் ராட்சத பலூனில் பறந்த சிவகார்த்திகேயன்..!!! பிரமித்து போன ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் பணியாற்றி அதன்பின் சின்ன சின்ன குறும்படங்களில் நடித்து சினிமாவில் மெரினா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து இன்று தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் படத்தை பொறுத்தவரை குறுகிய பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதை சரியாக புரிந்துகொண்ட தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவாவின் கமர்ஷியல் பார்முலா சரியாக ஒர்க் அவுட் ஆவதால் சிவாவின் படங்களும் வெற்றி படங்களாக அமைகின்றன.

உடனே வித்தியாசமான படங்களில் நடித்தால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை சரியாக புரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக தன் படங்களில் வித்தியாசத்தை காட்ட விரும்புகிறார். தற்பொழுது தன் படங்களில் கதையும் அழுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் டாக்டர் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரை பார்க்கும்போது கோலமாவு கோகிலா பாணியில் மிஷ்கின் பட சாயலில் இருந்தது.

ஒரு பொழுதுபோக்கு படத்தில் அழுத்தமான கதையை சொல்லி இருக்கிறாராம் நெல்சன். டாக்டர் படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரைக்கு வருவதால் தயாரிப்பாளர்கள் முழுவீச்சில் புரமோஷனுக்கு இறங்கிவிட்டார்கள் தற்பொழுது டாக்டர் படத்தில் ஒரு தயாரிப்பாளரான KJR ஸ்டுடியோஸ் ராட்சத பலூன் ஒன்றை பறக்கவிட்டு புரமோஷனை தொடங்கியுள்ளார்.
அந்த பலூனில் சிவகார்த்திகேயன் படம் மற்றும் டாக்டர் டைட்டில் கார்டு ரிலீஸ் தேதி அச்சிடப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles