சுசித்ரா முதலில் தமிழ் ரேடியோ ஜாக்கியாக வேலை செய்தவர். ஏராளமான பாடல்களை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பாடியுள்ளார். சுசித்ரா மாதவனின் ஜேஜே என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் அதன்பின் சூர்யாவின் ஆயுத எழுத்து என்ற படத்தில் நடித்து இருந்தார். யாரடி நீ மோகினி என்ற படத்தில் தனுஷின் நண்பனாக வரும் கார்த்திக் என்பவரை சுசித்ரா திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எதோ சில காரணங்களால் பிரிந்தனர்.
சமீபத்தில் சுசிலீக்ஸ் என்று நடிகர் நடிகைகளின் நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது இவர்தான். சுசித்ரா சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நடிகர் நடிகைகளைப் பற்றி தன்னை அறியாமலேயே புகைப்படங்களை வெளியிட்டார். இவர் வெளியிட்ட பட்டியலில் தனுஷ்,திரிஷா,அனுயா, DD, ஆண்ட்ரியா,அனிருத் என ஏராளமான பிரபலங்களின் பர்சனல் புகைப்படங்கள் வெளியானது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சுசித்ரா அவர்கள் அஜித் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டார். சுசித்ரா பிரபலமான பாடகி என்று அனைவருக்கும் தெரியும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் பாடல்களாக அமைந்தது. தல அஜித்திற்கு சுசித்ரா பாடிய பாடலில் மிகவும் பிடித்தது என்ன தெரியுமா. தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை என்ற பாடல்தான் ரொம்ப பிடிக்குமாம். இந்த விஜய் பயலுக்கு எப்படி இந்த மாதிரி பாடல்கள் அமையுது. என் படங்களுக்கு இதுபோன்ற பாடல் அமைய மாட்டேங்குதே என்று வருத்தப்பட்டாராம் தல அஜித்.