Saturday, May 4, 2024
-- Advertisement--

பழம்பெரும் பிரபல பாடகி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!!! வெளியான தகவல்…

இந்திய சினிமாவிலேயே புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரகுமான் முதன்மையானவர். அவர் 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாம்பே, காதலன், திருடா திருடா, ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ஏ.ஆர்.ரகுமான் புதிய அவதாரமாக தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் 99 சாங்ஸ். இந்த திரைப்படம் இசையுடன் இணைந்த காதல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் முதல் முறையாக தயாரிப்பாளராகவும், கதாசிரியராகவும் 99 சாங்ஸ் உருவானது மேலும் ஓ டி டி தளத்தில் திரைப்படம் வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப்படத்தின் பிரமோஷனுக்காக ட்விட்டர் தளத்தில் பேஸ் பிரிவில்ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களை கலந்துரையாடினார். அதேபோல் 99 சாங்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு பழம்பெரும் பாடகி பி.சுசீலா தன்னிடம் பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தென் இந்தியாவில் மிகச்சிறந்த பாடகியான பி.சுசிலா 99 சாங்ஸ் படத்தை நெட்ப்ளிக்ஸ் பார்த்துவிட்டு படம் “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் பாராட்டியுள்ளார்.

அதேபோல் என்னுடைய கதையை இதேபோல் படமாக உருவாக்க வேண்டும் அதற்கு நீங்கள் உதவ முடியுமா என்று ஆ.ர்.ரஹ்மானிடம் பாடகி பி.சுசிலா கேட்டுள்ளார். இதனை கேட்ட ஏ.ஆர்.ரகுமான் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய பி சுசிலா அவர்கள் என்னுடைய படத்தை பார்த்து பாராட்டியது மிகப்பெரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles