சீனாவில் ஆரம்பித்த கொரானோ வைரஸ் தற்போது உலகெங்கும் உள்ள பல நாடுகளில் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 34 லட்சத்திற்கும் மேல் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் 11 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு 67 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். பல ஹாலிவுட் பிரபலங்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாப் பாடகி மடோனா. இவர் கொரானாவுக்காக எடுக்கப்பட்ட சோதனையின் போது இவருக்கு கொரானோ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவரை தனிமைப்படுத்துள்ளார்கள்.
இந்த செய்தி இவர் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் இவர் இதில் இருந்து மீண்டு வருமாறும் அவர் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.