ராஜ ஆட்சி முறை முடிவுக்கு வரும் முன்னே மூடி சூடியவர் சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது சிங்கம்பட்டி என்னும் ஊர்.
இதில் 36 ஆவது ராஜாவாக முடிசூடி உள்ளவர் முருகதாஸ் தீர்த்தபதி. இவரது அப்பா1936- ஆம் ஆண்டு சங்கர தீர்த்தபதி காலமானதால் இவர் தனது ஆறு வயதிலேயே ராஜாவாக முடிசூடினார். ராஜா ஆட்சி முறை இந்தியாவில் முடிவுக்கு வந்ததால் இவர் தான் கடைசி ராஜா என கருதப்படுகிறார்.
இவரை மையமாக வைத்துதான் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தில் நடித்து இருந்தார். இவரை ஊர் மக்கள் ராஜாக்கு உரிய மரியாதையோடு இவரை போற்றி வந்தனர். இந்நிலையில் சிங்கபட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி வயது மூப்பு காரணமாக இருந்துள்ளார். இதற்கு சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் சீமராஜா படத்தில் நடித்ததற்கு மிகவும் பெருமை அடைகிறேன், என்று கூறி இறப்பிற்கு மிகுந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.