Wednesday, December 4, 2024
-- Advertisement--

சிம்ம ராசி : ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2023 -2024..!!! பரிகாரங்கள் விவரம் ..!!!

மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும், எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 9-ல் சஞ்சரித்த சர்ப கிரகங்களான ராகு- கேது திருக்கணிதப்படி வரும் 30-10-2023 முதல் 18-5-2025 வரை (வாக்கியப்படி 8-10-2023 முதல் 26-4-2025 வரை) உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது மிக மிக நல்லது.

பேச்சில் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக ஏற்படும் சிறுசிறு தேவையற்ற நெருக்கடிகளைக் சமாளிக்க முடியும். பல்வேறு பொது காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு, ஆன்மிகப் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கும் கிரகமான சனி தற்போது 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குகூட தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் காரணமாக ஒற்றுமை குறைவுகள், மன அமைதி குறைவு உண்டாகும்.

குறிப்பாக மனைவி வழி உறவினர் களிடம் வீண் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதும், உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பதும் உத்தமம்.

பொதுவாக ஒரு சிறு பாதிப்பாக இருக்கின்ற பொழுதே ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பெரிய பிரச்சினையிலிருந்து எளிதில் தப்பிக்க முடியும். மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியதுவம் தருவது நல்லது வண்டி, வாகனங் களில் பயணம் செய்யும்போது முன்னேச்சரிக்கையுடன் இருப்பது இரவு நேரங்களில் பயணங்களைத் தவிப்பது நல்லது- உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியனுக்கு நட்பு கிரகமான குரு கோட்சார ரீதியாக வரும் 1-5-2024 முடிய உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது ஒரு அற்புதமான அமைப்பு என்ற காரணத்தினால் உங்களது பொருளாதார நிலையானது மிகமிக நன்றாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.

கடுமையான நெருக்கடியில் கூட எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினை களை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்களை நீங்கள் அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பலமும் எடுத்தப் பணியை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலமும் உங்களுக்கு இருக்கும். I-5-2024 முதல் குருபகவான் 10-ல் சஞ்சாரம் செய்ய இருக்கின்ற காலத்தில் பணப்பரிமாற்ற விஷயங்களில் சில நெருக்கடிகள் இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும்.

தொழில், வியாபாரத்தில் குரு மாற்றத்திற்குப் பிறகு சற்று பொறுமையோடு நடப்பது ஒவ்வொரு வாய்ப்பிலும் கவனம் செலுத்தி செயல்படுவது, வேலையாட்கள் மற்றும் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன்மூலம் அடையவேண்டிய இலக்கை நீங்கள் அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் நீங்கள் கவனத்தோடு இருந்தால் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கமுடியும். கால நேரம் பார்க்காமல் நீங்கள் உழைப்பதன்மூலம் அதற்கான நற்பெயரை நீங்கள் பெறமுடியும்.

சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர் கல்வியில் கவனமாக செயல்பட்டால்தான் முன்னேற்றத்தை அடைய முடியும் திறமைக்கு ஏற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள் என்றாலும் படிப்பிற்கு அதிக அக்கறை எடுக்கவேண்டி இருக்கும். தனி திறனை வெளிபடுத்தும் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்: 1, 2, 3, 9. நிறம்: வெள்ளை, சிவப்பு கிழமை: ஞாயிறு, திங்கள் கல்: மாணிக்கம். திசை: கிழக்கு தெய்வம்: சிவன்.

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் ராகு, 2-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன் படுத்துவதும் நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேது வுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமை களில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள். வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது உங்களுக்கு குருபகவான் வரும் 1-5-2024 முதல் 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவிப்பது, வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு யந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்ற வற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது ஆஞ்சனேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நல்லது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles