Monday, May 13, 2024
-- Advertisement--

இரவு நேர பார்ட்டியில் பிரபல நடிகைகளுடன் சிம்பு..!!! இணையத்தில் வலம் வரும் புகைப்படங்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்திரனின் மூத்த மகன் ஆவார். இவர் ஒரு இயக்குநர், நடிகர், எழுத்தாளர், நடன இயக்குனர், கதாசிரியர், பின்னணிப் பாடகர் என தமிழ் சினிமாவில் பல முகங்களைக் கொண்டவர்.

இவரது தந்தை இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழில் அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, அடங்காதவன் அசராதவன், செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் நடிகராக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அடிக்கடி கிசுகிசுக்களும் சர்ச்சைகளிலும் மாட்டிக்கொள்பவர் சிம்பு. நடிகை நயன்தாராவை காதலிக்கிறார் என்று கிசுகிசு எழுந்த நிலையில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகாவுடன் கிசுகிசு எழுந்தது, அதன்பின் இருவரும் காதலிக்கின்றனர் என பத்திரிக்கையில் செய்தி வெளிவந்தது. அதன்பிறகு அந்த காதலும் முறிந்து போனது . தொடர்ந்து சிம்பு பற்றி பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இரவு நேர பார்ட்டியில் அதிகம் கலந்து கொள்வார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது, என்னதான் நடிப்பிலும் வேலையிலும் சரியாக இருந்தாலும் சில சர்ச்சைகளில் சிம்பு அடிக்கடி மாட்டி கொள்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் இரவு நேர பார்ட்டி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

வெளியான புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றாலும் தற்பொழுது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles