நடிகர் சிலம்பரசன் டி ஆர் ராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன். சினிமா மீது அலாதி பிரியம் கொண்ட டிஆர் ராஜேந்தர் ஒரே ஆளாக கதை எழுதி இயக்கி இசையமைத்து படங்களை வெளியிட்டு வெற்றியும் பெற்றவர். ஒரு நேரத்தில் டி ஆர் ராஜேந்திரன் அவர்களின் செட் என்றால் பிரம்மாண்டமாக இருக்கும்.
அவரது மகன் சிம்புவை சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வைத்து சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூடவே நின்றவர். சிறுவயதில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவானார்.
குறிப்பாக சிம்பு நடித்த படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றது சிம்புவும் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வருவார் என்று மக்கள் தரப்பில் எதிர்பார்த்தனர் ஆனால் சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் சிம்பு திடீரென்று நயன்தாராவை காதலிக்க தொடங்கினார்.
வல்லவன் படப்பிடிப்பில் தொடங்கிய இவரது காதலை ஒரு சினி நிகழ்ச்சி மேடையில் நயன்தாராவிடம் தான் காதலிப்பதாக கூறினார் சிம்பு. சிம்புவும் நயன்தாராவும் பல வருடங்கள் காதலித்து வந்தனர் TR வீட்டுக்கு மருமகளாக போகும் நயன்தாரா என்றெல்லாம் எழுதினார்கள். திடீரென்று இருவரும் சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்தார்கள். அதன்பின் சில வருடங்கள் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு படங்கள் நடிக்க தொடங்கினார் அப்போது தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் திடீரென்று ஹன்சிகா சிம்பு காதல் முறிந்தது அதற்குக் காரணம் சிம்புவின் தற்போதைய நிலையை கூறி ஹன்சிகாவின் தாயார் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்கள் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில்.
அதன்பின் நொந்து போன சிம்பு உடல் எடை கூடி ஒரு சில படங்களில் நடித்தார் ஆனால் அந்த படங்களை பார்க்கும் போது சிம்பு ஏன் இப்படி மாறிவிட்டார் என்று நினைக்கும் அளவிற்கு சினிமாவிற்கும் இவருக்கும் சம்பந்தமில்லாதது போல இருந்தார். திடீரென்று ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்தினார். மகனை நினைத்து சிம்புவின் தந்தை மற்றும் அம்மா உஷா அவர்கள் மிக கவலைப்பட்டனர்.
சிம்பு கால்ஷீட் கொடுத்த படங்கள் அனைத்தும் பாதியில் நின்றன அதன்பின் சமீபத்தில் சிம்பு கடுமையாக தனது உடல் எடையை குறைத்து கோவில் படத்தில் பார்த்தது போல மிக இளமையாக தோற்றத்தை மாற்றி கொண்டு சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீசான ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் ஆகும்போது என் படமும் ரிலீஸ் ஆகட்டும் என்று கூறியவர் என் படத்தை விஜய் ரசிகர்கள் பார்க்கட்டும் மாஸ்டர் படத்தை என் ரசிகர்கள் பார்க்கட்டும் என்று கூறியிருந்தார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறந்தவுடன் விஜய்யின் மாஸ்டர் படம் பார்ப்பதற்கு கூடிய கூட்டம் அதிகமாக இருந்தது. மாஸ்டர் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் ஈஸ்வரன் படத்திற்கு மக்கள் செல்கிறார்கள்.
ஈஸ்வரன் படம் ஓகே ஆன படம் சிம்புவின் கம்பேக் மூவி வேறொரு நாளில் வெளியிட்டு இருக்கலாமே என்பது தான் ரசிகர்களின் ஒரே வருத்தம். அப்படி வெளியிட்டு இருந்தால் அணைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை பார்த்து இருப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.
இருந்தாலும் சிம்புவின் ஈஸ்வரன் படம் நஷ்டம் இல்லாமல் ஓரளவு லாபத்தை தந்தது தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆறுதல் அதேநேரத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு நடித்து வெளிவந்த படம் நன்றாக ஓடுகிறது என்று அவரது குடும்பத்தினர்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.
சமீபத்தில் சிம்புவின் அம்மா சிம்புவிற்கு தான் சமைத்த உணவை ஊட்டி விட்டு உள்ளார். அம்மாவின் கையால் சிம்பு ருசித்து சாப்பிட அதை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் தாயன்பை போல வருமா. யாருக்கும் கிடைக்காத பொக்கிசம் தாயின் அன்பு என்று புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.