கோ இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் இயக்கி மாபெரும் வெற்றியைப் பெற்ற படம் தான் கோ. இந்தப் படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்து இருந்தார். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமான கோ படத்தில் முதலில் நடித்தது சிம்பு தானாம். சிம்புவை வைத்து பல காட்சிகளை எடுத்த கேவி ஆனந்த்.
சிம்பு ராதாவின் மகள் கார்த்திகா நாயர் உடன் நடிக்க விருப்பம் இல்லை வேறு ஏதாவது முன்னணி கதாநாயகிகளை கோ படத்தில் ஹீரோயினாக போடுங்கள் என்று கேட்டாராம். அதுமட்டுமல்லாமல் தமன்னாவை ஹீரோயினாக போடுங்கள் என்று இயக்குனர் மற்றும் தயாரிப்பு தரப்பு தரப்பில் கூறி வந்தாராம்.
சிம்புவை வைத்து எடுத்த காட்சிகள் நன்றாக வந்திருந்தாலும் முன்னணி நடிகை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளரிடம் கூற அவ்வளவு அதிக சம்பளத்தை தற்பொழுது கொடுக்க முடியாது என்று தமன்னாவை அணுக மறுத்தார்கள் தயாரிப்பாளர் தரப்பு. அது மட்டும் அல்லாமல் எடுத்த காட்சிகள் நன்றாக வந்தது இருந்ததால் ஹீரோயினை மாற்ற கே வி ஆனந்த் ஒப்புக் கொள்ளவில்லையாம்.
அதன்பின் அந்தப் படத்தை விட்டு விலகியதாக கூறுகிறார்கள் சினி வட்டாரத்தில். சிம்பு விலகியபின் படத்தில் ஹீரோவாக போடலாம் என்று தேடி வந்தார்கள் அப்பொழுது ஜீவாவை கதாநாயகனாக நடிக்க வைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்தார்கள் படம் வெளியாகி பெரிய ஹிட் படமாக அமைந்தது.