Monday, May 13, 2024
-- Advertisement--

சிம்புவின் மாநாடு படத்தில் வில்லன் தனுஷ்..!!! ட்ரைலரில் இதை கவனிச்சிங்களா…!!!

சிம்பு வெங்கட்பிரபுவின் கூட்டணியில் மாநாடு பல தடைகளை தாண்டி தற்பொழுது தீபாவளி தினத்தன்று வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு படம் என்றாலே சற்று வித்தியாசமாகவும் இளைஞர்களை கவரும் படி இருக்கும் அதிலும் சிம்புவும் வெங்கட்பிரபுவும் இணையும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் இந்தப்படம் சிம்புவுக்கு ஒரு பெரிய மைல்கல்லாக அமையும் என்று கூறியிருந்தார். சிம்புவும் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து தொடர்ந்து டயட் மைண்டைன் செய்து உடல் எடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார்.

மாநாடு படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளியானது. என்னடா படமெடுத்து வைத்திருப்பார்கள் வழக்கம் போல அரசியல் கலந்த மாஸ் மசாலா கதையாகத்தான் இருக்கும் என்று டிரைலரை பார்த்த அனைவருக்கும் பெரிய ஆச்சரியம்.

ஆங்கிலப் படங்களில் பயன்படுத்திய TIMELOOP என்ற கான்செப்ட்டை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். ஸ்டைலான சிம்புவை நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது தளபதி விஜயின் தந்தை SAC அவர்களை சிம்பு அவர்கள் நெற்றியில் சுடுவது போல ஒரு காட்சி இருந்தது.

இந்தப் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா அவர்கள் போலீஸ் கெட்டப்பில் நடித்து இருக்கிறார். எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர் தனுஷ்கோடி. சிம்புவின் போட்டியாளராக கருதப்படும் தனுஷ் பெயரை வில்லன் கதாபாத்திரத்திற்கு வைத்திருப்பது மறைமுக தாக்குதல் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விவாதித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles