சிலம்பரசன் டி ஆர் ராஜேந்திரன் அவர்களின் செல்ல மகன். தன் மகன் சிம்புவை ஊக்குவித்து சிறுவயதிலிருந்து சினிமாவில் நடிக்க வைத்தார் ராஜேந்தர். சின்ன கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறுவயதிலேயே நடித்து அசத்தினார் சிலம்பரசன். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்த சிம்பு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாராவை தீவிரமாக காதலித்து வந்தார் அதன் பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் நயன்தாரா சிம்பு பிரிந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சில வெற்றி படங்களை கொடுத்த சிம்பு வாழ்க்கையில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது. படவாய்ப்புகளும் திடீரென்று குறைந்தது. வாய்ப்புகள் குறைந்த உடன் சிம்பு சினிமாவை விட்டு விலகி சற்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆன்மீகம் தனக்கு மனம் அமைதி தருவதாகவும் சற்று மாற்றம் வேண்டும் என்பதற்காக சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அதன்பின் சில படங்களில் கமிட் ஆனார் ஆனால் சூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை என்று புகார்கள் வந்தது. வாலு என்ற படத்தில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவிற்கு சிம்புவுக்கும் காதல் மலர்ந்தது.
சிம்புவின் ராசியா என்ன என்பது தெரியவில்லை ஹன்சிகாவின் காதலும் கல்யாணம் வரை செல்லாமல் பாதியில் நின்றது. என்னடா வாழ்க்கை என்று உடைந்து போனார் சிம்பு. சிம்பு எது செய்தாலும் சர்ச்சையானது. அவருடைய சக போட்டியாளர்கள் அனைவரும் முன்னேறிக் கொண்டே போனார்கள். மனம் நொந்து போன சிம்பு ஒரு பேட்டியில் எல்லாவற்றையும் இழந்து விட்டேன் செலவுக்கு கூட அம்மாவிடம் வாங்கும் நிலைமைக்கு வந்து விட்டேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.
சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது என்றும் பல பேர் நினைத்துக் கொண்டிருக்கையில் சிம்பு தனது உடலின் எடையை பாதியாக குறைத்து சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாக புகைப்படங்கள் வெளியிட்டார். ஈஸ்வரன் படப்பிடிப்பில் தவறாமல் கலந்துகொண்டு நல்லபடியாக சூட்டிங்கை முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம் தற்போது ஏற்கனவே வெங்கட்பிரபுவின் மாநாடு என்ற படம் பாதியில் சிம்புவால் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்பொழுது சிம்பு மீண்டும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
தற்பொழுது ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சிம்புவிற்கு அவரது தாய் உஷா ராஜேந்தர் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார். சிம்பு நீண்ட நாட்களாக விருப்பப்பட்ட கார் ஒன்றை அன்பு பரிசாக வாங்கி கொடுத்துள்ளார். தனது அம்மாவின் அன்பு பரிசான புதிய காரில் தற்பொழுது சிலம்பரசன் உலா வந்து கொண்டிருக்கிறார்.