நம் தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பாலிவுட் தான் உயர்ந்தது என்று ஒரு ஒரு சிலர் நினைத்துள்ளனர். அதில் உள்ள நட்சத்திரங்கள் தான் மிகவும் பிரபலமானவர்கள் அவர்களுக்கு தன் திறமை அதிகம் என்றும் பலர் நினைக்கின்றனர்.
இந்த நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தாலும் இன்னும் முழுதாக மாறவில்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் பாலிவுட்டில் நம் தமிழ் பிரபலங்களும் பலர் நடித்து நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். பிரபுதேவா, தனுஷ் இதற்கு ஒரு உதாரணம்.
இந்நிலையில் பாலிவுட் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை முதல் முறையாக தமிழ் நடிகரின் படம் அதிக டிஆர்பியை பெற்றது இல்லை. தமிழில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் கடந்த வாரம் ஹிந்தி சேனலில் வெளியானது. இந்த படத்தை சுமார் 20 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்து டி ஆர் பி யில் ஒரு சாதனை செய்துள்ளனர். இது தமிழ் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.