Wednesday, May 1, 2024
-- Advertisement--

சுற்றுலாத்தளத்தில் புகைப்படம் எடுத்தவரை தனது பின்னழகை காட்டி கலாய்த்த ஸ்ரேயா..!!!

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஸ்ரேயா மழை என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்திலும் நடித்திருந்தார். சிவாஜி படத்தின் வெற்றி விழாவிற்கு ஸ்ரேயா அணிந்து உடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. முதல்வர் கருணாநிதி பங்கு பெற்ற நிகழ்ச்சிக்கு இப்படி வரலாமா என்று கண்டங்கள் வந்தது.

தளபதி விஜயின் அழகிய தமிழ் மகன் படத்திலும் நடித்திருந்தார். ஒரு நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருந்தது அவருடைய கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்திருந்தனர்.

பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுவதால் ஸ்ரேயா நடிக்கும் படங்களில் பாடல் காட்சியில் கவர்ச்சி காட்சிகள் சற்று தூக்கலாகவே வைப்பார்கள் இயக்குனர்கள். 38 வயதான ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 12-ம் தேதி தனது ரஸ்சிய காதலரான ஆண்ட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது காதல் கணவருடன் இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்லும் ஸ்ரேயா சில மாதங்களுக்கு முன் நடந்த பார்ட்டி ஒன்றில் லிஃப்டில் ஏறுவதற்கு முன்பு தனது காதல் கணவருக்கு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்பொழுது தனது காதல் கணவருடன் ரஷ்யாவை சுற்றி வரும் ஸ்ரேயா ரஷ்யாவில் சுற்றுலா தளத்தில் ஒருவர் ஒய்யாரமாக போஸ் கொடுப்பதை பார்த்து கிண்டல் செய்து ஸ்ரேயாவும் அதேபோல் தனது பின்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவுக்கு குசும்பு இன்னும் குறையவில்லை என்று கலாய்த்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles