Monday, June 3, 2024
-- Advertisement--

செம்ம கியூட்… முதல் முறையாக ரசிகர்களுக்கு குழந்தையின் முகத்தை கட்டிய ஸ்ரேயா கோஷல்…!!!

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது என்னுடைய குழந்தையின் முகத்தை ஆறு மாதத்திற்கு பிறகு ரசிகர்களிடம் காட்டியுள்ளார்.

அந்த க்யூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தேவதாஸ் என்ற இந்தி படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் அவர் பாடிய “சலக் சலக்” என்ற பாடல் சூப்பர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது.

பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் “முன்பே வா என் அன்பே வா” என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.

அதோடு விருமாண்டி படத்தில் இடம்பெற்ற “உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல” போன்ற பாடல்களால் தமிழக இவர்களின் மனதை விட்டு நீங்காமல் இடம் பிடித்துள்ளார்.

மேலும் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர் இசையில் பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் பாடிய ஏராளமான பாடல் சூப்பர்ஹிட் அடித்துள்ளது. மேலும் தமிழ்மொழி தெரியாமலே பாடல்களை அழகாக பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஆறு வருடங்களுக்குப்பின் கர்ப்பமாக இருந்த ஷ்ரேயா கோஷல் கடந்த மே 22 ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த தகவலை சமூக வலைத் தளங்களின் வாயிலாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்.

பாடகி ஸ்ரேயா கோஷல் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அதோடு அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இந்நிலையில் தற்போது முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு  உள்ளார்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles