பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளின் ஷில்பா ஷெட்டியும் ஒருவர். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். அதன்பிறகு மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். .
இத்தம்பதியினருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்தார். மேலும் குழந்தையை சில்பா செட்டி வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார் என்று சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்முறையாக ஷில்பா ஷெட்டி நான் ஏன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றடுத்தேன், என்ற விளக்கத்தை இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அதில் என் மகனுக்கு சகோதர உறவோடு இருக்க ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் குழந்தை பெற்றுக்கொள்ள தயாரானபோது இருமுறை நான் கரு தரித்தும் அந்த கரு சிதைந்து விட்டது. பின்னர் ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினேன் ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இதையடுத்து 4 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு நான் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன் என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.