Friday, May 17, 2024
-- Advertisement--

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி டாக்டரா..!!! எங்கு படித்து உள்ளார் தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கும்பகோணத்தை சேர்ந்தவர். தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் அதன்பின் ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகம் ஆனார்.

அர்ஜுனை வைத்து முதன்முதலாக எடுத்த ஜென்டில்மேன் திரைப்படம் பல விருதுகளை இவருக்கு அள்ளி குவித்தது படமும் பெரிய அளவில் ஹிட்டானது அதனை தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து காதலன் என்ற படத்தை எடுத்து இருந்தார் அந்தப் படமும் ஷங்கரின் விறுவிறுப்பான திரைக்கதையால் பெரிய ஹிட் படமாக அமைந்தது.

இயக்குனராக பலமான அததிவாரத்தை தமிழ் சினிமாவில் போட்ட சங்கர் ஜீன்ஸ், இந்தியன், அந்நியன் என்று வரிசையாக பெரிய ஹிட் படங்களை கொடுத்தார். ரோபோக்களை வைத்து தனது கனவு படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று நினைத்த சங்கர் எந்திரன் என்ற படத்தின் மூலம் உலகுக்கு தன்னை யார் என்று நிரூபித்தார்.

அதனை தொடர்ந்து வந்த 2 .0 பெரிய அளவிற்கு இல்லை என்றாலும் சுமாராக இருந்தது தற்பொழுது கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 என்ற படத்தை இயக்கி கொண்டிருக்கும் சங்கர் தெலுங்கில் சிரஞ்சீவி அவர்களின் மகன் ராம்சரண் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது மகள் அதிதியை தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகப்படுத்த நினைத்த சங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமான் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். கிராமத்து கதாபாத்திரம் என்றாலும் அதிதிக்கு நல்ல ரோல்லாம்.

மாநாடு வெற்றி படத்தை கொடுத்து தற்பொழுது வெந்து தணிந்த காடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்புவின் அடுத்த படமான கொரோனா குமார் படத்தில் அதிதி தான் சிம்புவுக்கு ஜோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சங்கரின் மகள் அதிதி ராமச்சந்திரா யுனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியானது. அதில் ராமச்சந்திரா யுனிவர்சிட்டியில் டாக்டர் படிப்பு படித்த அதிதி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற போது எடுத்த புகைப்படம் என்று அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles